உலகநாயகன் கமலஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன், தன்னுடைய காதலரை மைகேல் கர்சலே கடந்த ஆண்டு பிரேக் அப் செய்த நிலையிலும் இந்த ஆண்டு மிகவும் வித்தியாசமான முறையில் காதலர் தின வாழ்த்துக்கள் கூறி கொண்டாடியுள்ளார். 

மைகேல் கர்சலே மீது கொண்ட காதல் பிரிவில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்துள்ள ஸ்ருதிஹாசன், மீண்டும் திரைப்படங்கள் நடிப்பதிலும் ஆல்பம் இசையமைப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில்... தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும் மற்ற சில மொழிகளிலும் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

தற்போது இவர் காதலர் தினத்தை வித்தியாசமாக கொண்டாடும் விதத்தில், ரோஜா பூக்களை வாயில் கடித்து கொண்டவாறு, கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.