shruthihassan call sheet problem
உலகநாயகன் கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்து வரும் திரைப்படம் 'சபாஷ் நாயுடு' இந்த திரைப்படம் ஆரம்பமான நாளில் இருந்து பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார், கமலஹாசன்.
கடந்த வருடம் அவருடைய காலில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவு குணமடைந்து,தற்போது மீண்டும் பழைய புத்துணர்வோடு சினிமா சின்னத்திரை என களம் இறங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு,இந்தி என 3 மொழிகளில் உருவாகி வரும் 'சபாஷ் நாயுடு' படம் மீண்டும் துவங்க ஏன் தாமதம் என செய்தியாளர்கள் கமல்ஹாசனிடம் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்துள்ள கமலஹாசன், தற்போது படம் துவங்க தானும் படக்குழுவினரும், தயாராக இருக்கிறோம் என்றும், ஆனால் தன்னுடைய மகள் ஸ்ருதி பிஸியாக நடித்து வருவதால் தற்போதைக்கு எனக்கு கால் சீட் கொடுக்க அவருக்கு நேரம் இல்லை என தெரிவித்துள்ளார்.
