Asianet News TamilAsianet News Tamil

அந்த விஷயத்துல ஸ்ருதிஹாசனை அடிச்சுக்க ஆளே கிடையாதாம்...

டிஸ்னி தயாரிப்பில் உருவாகியுள்ள உலகப் புகழ் பெற்ற அனிமேஷன் படமான ‘ஃப்ரோஸன் 2’ (Frozen 2) படத்தின் தமிழ் பதிப்பில் முக்கிய கதாபாத்திரத்திற்கு ஸ்ருதி ஹாசன் டப்பிங் பேசியிருக்கிறார்.வரும் டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் படத்திற்கு வசனம் மற்றும் பாடல் எழுதிய விவேக், அன்னா கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேசிய விஜே டிடி, எல்சா கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேசிய ஸ்ருதி ஹாசன் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.

shruthihasan interview about her dubbing talent
Author
Chennai, First Published Nov 14, 2019, 10:37 AM IST

’அந்த விஷயத்துல என்னை அடிச்சுக்க ஆளே கிடையாது. சின்ன வயசுல இருந்தே எனக்கும் தங்கை அக்‌ஷராவுக்கும் அப்பா கொடுத்த ட்ரெயினிங் அப்படி’என்று உற்சாகமாக மேடையில் அறிவித்தார் கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன்.shruthihasan interview about her dubbing talent

டிஸ்னி தயாரிப்பில் உருவாகியுள்ள உலகப் புகழ் பெற்ற அனிமேஷன் படமான ‘ஃப்ரோஸன் 2’ (Frozen 2) படத்தின் தமிழ் பதிப்பில் முக்கிய கதாபாத்திரத்திற்கு ஸ்ருதி ஹாசன் டப்பிங் பேசியிருக்கிறார்.வரும் டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் படத்திற்கு வசனம் மற்றும் பாடல் எழுதிய விவேக், அன்னா கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேசிய விஜே டிடி, எல்சா கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேசிய ஸ்ருதி ஹாசன் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.

 நிகழ்ச்சியில், டப்பிங் குறித்து பேசிய ஸ்ருதி ஹாசன்,’நான் நடிக்கும் தமிழ், தெலுங்குப் படங்களுக்கு டப்பிங் பேசும் போது, அந்த காட்சிகள் மற்றும் வசனங்கள் நினைவுக்கு வரும். அப்போது, இந்த காட்சியை அப்படி செய்திருக்கலாம், இப்படி செய்திருக்கலாம், என்று யோசிக்க தோன்றும். ஆனால், இந்த படத்திற்கு டப்பிங் பேசும் போது அப்படி எதுவும் தோன்றவில்லை என்பதோடு வித்தியாசமான அனுபவமாகவும் இருந்தது.shruthihasan interview about her dubbing talent

டப்பிங் என்பது எனக்கு சிறு வயதில் இருந்தே தெரிந்த வேலை தான். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் பல படங்களில் அப்பாவின் வழிகாட்டுதலுடன்  குழந்தை நட்சத்திரங்களுக்கு நானும் என் தங்கை அக்‌ஷராவும்  சிறு வயதிலேயே டப்பிங் பேசியிருப்பதால், டப்பிங் எனக்கு ஈஸியான வேலை தான். அதனால், நான் வேகமாக முடித்துவிடுவேன். நான் நடித்த படங்களுக்கு ஒரு நாள் அல்லது ஒன்றரை நாளில் டப்பிங் பேசிவிடுவேன், ஆனால் ’ஃப்ரோஸன் 2’ படத்தின் டப்பிங்கை ஒரே நாளில் முடித்துவிட்டேன், என்றார்.

அப்போது ஒருவர், பொதுவாக ஹீரோயின்கள் டப்பிங் பேச அதிக நாட்கள் எடுத்துக் கொள்வார்கள், என்ற போது, ஆமாம், நிறைய பேர் சொல்வாங்க, ஹீரோயின்கள் டப்பிங் முடிக்க நான்கு அல்லது ஐந்து நாட்கள் எடுத்துக் கொள்வார்கள் என்று, ஆனால் நான் அதிகபட்சம் ஒன்றரை நாளில் டப்பிங்கை முடித்துவிடுகிறேன்’என்று போல்டாக பதில் அளித்தார்.
 
Follow Us:
Download App:
  • android
  • ios