shreya saran latest news
எனக்கு 20 உனக்கு 18 படத்தில் இரண்டாவது நாயகியாக அறிமுகம் கொடுத்த நடிகை ஸ்ரேயா, பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நாயகி என்கிற இடத்தைப் பிடித்தவர்.
இவர் கடைசியாக சிம்புவுடன் நடித்த 'AAA ' திரைப்படம் படுதோல்வி அடைந்ததால், தமிழ் படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
மேலும் இவருக்கு முகத்தில் முதிர்ச்சி தெரிவதால் இவரை கதாநாயகியாக நடிக்க வைக்க பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டி வந்தனர். இதனால் பலரது பார்வையையும் இழுப்பதற்காக சமீபத்தில் தண்ணீருக்குள் பிகினி உடையில் இருப்பது போல வித்தியாசமான போஸ் கொடுத்தார்.

இதனால் இவருக்கு தற்போது பட வாய்ப்பு வருகிறதாம், ஆனால் இவர் ஒரு கோடி ரூபாய் சம்பளமாகக் கேட்டு தயாரிப்பாளர்களை அலர வைக்கிறாராம்.
