தென்னிந்திய மொழிப்படங்களில் கடந்த 17 ஆண்டுகளாக நடித்து வருபவர் ஸ்ரேயா. சமீபத்தில் இவர் நடித்து வெளியான திரைப்படங்கள் இவருக்கு வெற்றிப்படங்களாக அமையவில்லை. விரைவில் தமிழில் இவர் நடித்துள்ள நரகாசுரன் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

தொடர்ந்து நடிக்க பட வாய்புகள் கிடைக்காததால் ரஷ்யாவை சேர்ந்த காதலரை திருமணம் செய்ய முடிவெடுத்து விட்டார். இவர்களுடைய திருமணம் வரும் மார்ச் மாதம் 18ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் குடும்ப முறைப்படி மிகவும் பிரமாண்டமாக மூன்று நாட்கள் நடைப்பெற உள்ளது.

தற்போது ஸ்ரேயாவிற்கு 35 வயதாகிறது. ஆனால் அவரது வருங்கால கணவராகப்போகும் ஆண்ட்ரிவிற்கு 25 வயது தான் ஆகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இவர் தன்னைவிட பத்து வயது சிறியவரை திருமணம் செய்ய உள்ளதாகவும். மேலும் திரையுலகில் இதுவரை 10 வயது சிறியவரை எந்த நடிகையும் திருமணம் செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.