Asianet News TamilAsianet News Tamil

’ரஜினி,கமல்,அஜீத்,விஜய் ஆகியோரை தமிழ்சினிமாவில் இருந்து தூக்கியெறியணும்’- சாட்சாத் சாரு நிவேதிதாவேதான்

’சமீப சிலவாரங்களாக, மிக ஆச்சர்யமாக தமிழ்சினிமாவில் தொடர்ந்து நல்ல படங்கள் வருகின்றன. இதே நிலை நீடித்தால் ஏற்கனவே தாங்கள் நடித்த கதைகளிலேயே மீண்டும் மீண்டும் நடிக்கும் கமல்,ரஜினி,அஜீத்,விஜய் ஆகியோர் தமிழ்சினிமாவிலிருந்து மெல்ல அப்புறப்படுத்தப்படுவார்கள்.

shout throw out from tamil film industry
Author
Chennai, First Published Oct 21, 2018, 12:36 PM IST

’சமீப சிலவாரங்களாக, மிக ஆச்சர்யமாக தமிழ்சினிமாவில் தொடர்ந்து நல்ல படங்கள் வருகின்றன. இதே நிலை நீடித்தால் ஏற்கனவே தாங்கள் நடித்த கதைகளிலேயே மீண்டும் மீண்டும் நடிக்கும் கமல்,ரஜினி,அஜீத்,விஜய் ஆகியோர் தமிழ்சினிமாவிலிருந்து மெல்ல அப்புறப்படுத்தப்படுவார்கள். அப்படி நடந்தால் நான் மிகவும் மகிழ்வேன்’ என்கிறார் எப்போதும் சர்ச்சையை சட்டைப்பையில் சுமந்துகொண்டு அலையும் எழுத்தாளர் சாருநிவேதிதா.

shout throw out from tamil film industry

தனது வலைதளப்பக்கத்தில் மேற்படி கருத்தை வெளியிட்டிருக்கும் சாரு,’ கடந்த பத்துப்பதினைந்து வருடங்களாக நான் தமிழ் சினிமாவைத் திட்டித்திட்டியே ஏராளமாகப்பேசியிருக்கிறேன். அதே திட்டுக்களோடு ஐந்து புத்தகங்களும் கூட எழுதிவிட்டேன். ஆனால் சமீபகாலமாக தமிழ்சினிமாக்கள் சிறப்பாக இருக்கின்றன.

shout throw out from tamil film industry

’96, ‘ராட்சசன்’ ‘பரியேறும் பெருமாள்’, வட சென்னை என்று வரிசையாக நல்ல படங்கள் வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

shout throw out from tamil film industry

ஆனால் இதே வரிசையில் எல்லோராலும் கொண்டாடப்பட்ட ‘மேற்குத்தொடர்ச்சி மலை’ படம் எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. காரணம் மலைவாழ் மக்களின் துயரத்தை மட்டுமே அந்தப்படம் பதிவு செய்திருக்கிறது.

தமிழ்சினிமாவில் இந்நிலை தொடர்ந்தால் ஏற்கனவே பிச்சிப்பிச்சிப் போடப்பட்ட பழைய சமாச்சாரங்களியே தங்கள் படங்களில் கொடுக்கும் ரஜினி,கமல்,அஜீத், விஜய் ஆகியோர் இனி இங்கே காலம் தள்ளமுடியாது. அது விரைவில் நடக்கும் என்றே நம்புகிறேன்’ என்கிறார் சாரு.

Follow Us:
Download App:
  • android
  • ios