* எனக்கு எப்போதெல்லாம் பிரச்னைகள், சிக்கல்கள் அரசியலில் வந்ததோ அப்போதெல்லாம் கருணாநிதி ஆலோசனை வழங்கினார். அவர் கொடுத்த யோசனைகள் இப்போது வரை எனக்கு உதவியிருக்கிறது: என்று சோனியாகாந்தி பெருமிதம். (அடடா! அ.தி.மு.க.காரய்ங்களுக்கு இந்த ஒரு ஸ்டேட்மெண்டு போதுமே. ‘ஈழ இறுதிப்போரில் இலங்கை அரசுக்கு உதவ சொல்லி சோனியாவுக்கு ஐடியா கொடுத்ததே கருணாநிதிதான்.’ அப்படின்னு கெளப்பிடுவாய்ங்களேய்யா!)

* தமிழக பி.ஜே.பி.யை பொறுத்தவரை அனைத்து தொகுதிகளிலும் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்துவதிலும், தேர்தல் களப்பணிகளிலும் முழு மூச்சில் இப்போது ஈடுபட்டு வருகிறோம்! என தமிழக பி.ஜே.பி.யின் மாநில பொதுச்செயலாளர் வானதி கூறியுள்ளார். (அப்போ புதுச்சேரியையும் சேர்த்து நாற்பது தொகுதிகள்ளேயும் நோட்டாவுக்கு செம்ம்ம்ம ட்ரீட் இருக்குதுன்னு சொல்லுங்க மேடம்!)

* அ.தி.மு.க. ஆட்சியில் செய்த சாதனைகளுக்காக கரூர் மாவட்டத்தின் நான்கு தொகுதி மக்களும் எங்களுக்குத்தான் வாக்களிப்பார்கள்: என அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை பேசியுள்ளார். (சாதனைன்னா என்னாண்ணே? உங்க மாவட்ட எம்.பி. தொகுதிக்குள்ளே போறப்பவெல்லாம் ‘குடிதண்ணியில காத்து கூட வர்ல! ஊரே சுடுகாடாட்டமா வறண்டு கெடக்குது பல வருஷமா.’ன்னு மக்கள் கொதிக்கிறாங்களே, அதுவாண்ணே?)

* பழைய தோவிகளுக்கு பழிவாங்கவே வைகோ, திருமா இருவரையும் கருணாநிதி சிலை திறப்புவிழா மேடையில் ஏற்றாமல் ஸ்டாலின் கீழே அமரவைத்தாரென இரு கட்சி நிர்வாகிகளும் கொதிப்பில் உள்ளனர்: செய்தி. (பட், நாடாளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு வரைக்கும் எம்பூட்டு அசிங்கப்படுத்தினாலும் நாங்க ரெண்டுபேரும் தம் கட்டி நிக்கப்போறதை இந்த உலகமே அதிசயமா பார்க்கும்யா!ன்னு ரெண்டு தலைவருங்களும் தாறுமாறான உறுதியில இருக்காங்களே!)

* ஸ்டிரைக்கின் காரணமாக கேரவேன் வராததால் அவுட்டோர் ஷூட்டிங்கின் இடைவெளியில் டாய்லெட்டை தேடி பெரும் அவஸ்தைப்பட்டு அலைந்திருக்கிறார் நடிகர் அக்‌ஷய்குமார்: செய்தி (இப்போ புரியுதா தல ஏழைங்க வேதன! ஒரு நாளுக்கே உனக்கு இந்தப்பாடுன்னா, பொறந்ததுல இருந்து கட்டையில போற வரைக்கும் ‘அது’க்கு ஒதுங்க நாய் படுற பாடுபடும் மனுஷங்களுக்கு என்ன பண்ணப்போகுது உங்க படாடோப பவுடர் உலகம்?)