பிரகாஷ் ராஜ் நின்ற இடத்தை கோமியம் ஊற்றி கழுவிய மாணவர்கள் - பரபரப்பை கிளப்பிய வீடியோ இதோ
நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்துகொண்ட கல்லூரி அரங்கை, பாஜக மாணவ அமைப்பினர் கோமியம் ஊற்றி சுத்தம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், அரசியல் விமர்சகர் என பன்முகத்திறமை கொண்டவர் பிரகாஷ் ராஜ். சினிமாவில் பிசியாக நடித்து வரும் இவர், ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக தொடர்ந்து அதிரடிக் கருத்துக்களை கூறி வருகிறார். இதன்காரணமாகவே பாஜகவினருக்கும், பிரகாஷ் ராஜுக்கும் இடையே டுவிட்டரில் அடிக்கடி மோதல் நடக்கும். இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தனது கருத்துக்களை தொடர்ந்து முன் வைத்து வருகிறார் பிரகாஷ்ராஜ்.
அந்த வகையில், கர்நாடக மாநிலம் சிவ்மோகாவில் உள்ள தனியார் கல்லூரியில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. சினிமா சமுதாயம் என்கிற தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் நடிகர் பிரகாஷ்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தனியார் அமைப்புகளுக்கு கல்லூரி வளாகத்தில் நிகழ்ச்சி நடத்த அனுமதி கொடுத்த கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து பாஜகவினரும், பாஜக மாணவ அமைப்பினரும் கல்லூரி முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதையும் படியுங்கள்... இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மேட்சில் ‘விடாமுயற்சி’ அப்டேட்... மீண்டும் அலப்பறையை ஆரம்பித்த அஜித் ரசிகர்கள்
இதையடுத்து நிகழ்ச்சி முடிந்து நடிகர் பிரகாஷ் ராஜ் அந்த கல்லூரியை விட்டு கிளம்பிய பின்னர், அந்த நிகழ்ச்சி நடைபெற்ற அரங்குக்குள் வந்த பாஜக மாணவர் அமைப்பினர், அந்த அரங்கம் முழுவதையும் பசு மாட்டும் கோமியத்தை ஊற்றி சுத்தம் செய்துள்ளனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கல்லூரி மாணவர்கள் செய்துள்ள இந்த செயலுக்கு கண்டனங்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... ‘தளபதி’க்கு தலைவலியாக இருந்த ‘புரட்சி தலைவி’... விஜய் vs ஜெயலலிதா மோதல் வெடித்தது ஏன்? ஒரு குட்டி பிளாஷ்பேக்