தன்னுடைய நண்பரின் வீட்டில் திடீர் என, சின்னத்திரை நடிகர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தன்னுடைய நண்பரின் வீட்டில் திடீர் என, சின்னத்திரை நடிகர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவரான இந்திரக்குமார், நடிப்பின் மீது கொண்ட தீவிர ஆசையால்... நடிக்க வாய்ப்பு கிடைக்கும் சின்ன, சின்ன கதாபாத்திரங்களில் கூட நடித்து வந்துள்ளார். தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சி சீரியலில் ஒரு சிறிய ரோலில் நடித்து வருகிறார்.
நேற்று இரவு நண்பர்களுடன், மிகவும் சந்தோஷமாக திரையரங்கில் படம் பார்த்துவிட்டு, சிரித்து பேசி கொண்டிருந்துள்ளார். அதே நேரத்தில் இவரது குடும்பத்தில் சில பிரச்சனைகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

திரைப்படம் பார்த்து விட்டு வந்ததால், நேரமாகிவிட்டது என கூறி மதனகோபாலபுரத்தில் தனது நண்பரின் வீட்டிலேயே தூங்கியுள்ளார். தனி அறையில் படுத்திருந்த அவர், காலையில் திடீர் என அங்கு இருந்த மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு, அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கவே, விரைந்து வந்த அவர்கள்... உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.
