தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரீத்து வர்மா, ரக்‌ஷன், நிரஞ்சனி ஆகியோர் நடித்துள்ள படம் "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்". நவீன தொழில் நுட்பத்தை வைத்து கொள்ளையடித்து வரும் இரண்டு நண்பர்கள் தங்களது காதலியுடன் செட்டிலாக முடிவெடுக்கிறார்கள். அதற்காக பெரிய தொகை ஒன்றை திருடுகிறார்கள் அதன் பின்னர் ஏற்படும் சுவாராஸ்ய திருப்பங்களே கதை. இந்த படம் எவ்வித பிரம்மாண்ட விளம்பரமும் இல்லாமல் திடீர் என ரிலீஸ் செய்யப்பட்டது. பார்ப்பவர்கள் கூட ஏதோ மலையாள படத்தோட டப்பிங் போல என்று கண்டும், காணாமல் சென்றனர். 

அதனால் ஆரம்பத்தில் இந்த படத்திற்கு பெரிதாக ஓப்பனிங் இல்லை. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் ரசிகர்கள் கொடுத்த பாசிட்டிவ் கமெண்ட்ஸ்கள் படத்தை வேற லெவலுக்கு நகர்த்தியது. தியேட்டர்களில் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது. இதனையடுத்து கடந்த இரண்டு வாரமாக படம் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

இந்நிலையில் இந்த படம் குறித்து வெளியாகியுள்ள சூப்பர் தகவல் ஒன்று கோலிவுட்டையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அதுதான் படத்தோட பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன். உலகம் முழுவதும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் இதுவரை 15 கோடி வரை வசூல் செய்திருக்கிறதாம். இந்த தொகை படத்தின் பட்ஜெட்டை விட பிரம்மாண்ட வசூலாக பார்க்கப்படுகிறது. 

தமிழில் இந்த படம் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் சுமார் 10 கோடி வரை வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் தெலுங்கிலும் இந்த படத்திற்கான தியேட்டர்களும், காட்சிகளும் நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வருகிறதாம்.