Breaking: அதிர்ச்சி... 29 லட்ச வாங்கிக்கொண்டு மோசடி செய்த ஏ.ஆர்.ரகுமான்! காவல்துறையில் பரபரப்பு புகார்!
ஏ.ஆர்.ரகுமான் 29 லட்சம் பெற்றுக் கொண்டு, திரும்ப தராமல் மோசடி செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், கடந்த சில வருடங்களாகவே அடுத்தடுத்து சில சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். அந்த வகையில் செப்டம்பர் 10ஆம் தேதி நடந்த 'மறைக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி, திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தனியார் நிறுவனம் மூலம், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில்.. அதிகப்படியான டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டதால், பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை நிற்க கூட இடமில்லாமல் அவதிக்கு ஆளாகினர். கூட்ட நெரிசல் காரணமாக, வயதானவர்கள் முதல் இளம் பெண்கள் வரை மயங்கி விழுந்த சம்பவங்களும், கூட்டத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சிலர் பாலியல் அத்து மீறல்களிலும் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இது குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாக, ஏ.ஆர்.ரகுமான் மீது பலர் தங்களுடைய விமர்சனங்களை வாரி இறைத்தனர்.
அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடித்து வந்த 'சப்தம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!!
பின்னர் இந்த நிகழ்ச்சிக்கும், ஏ.ஆர்.ரகுமானுக்கும் எந்த தொடர்பும் இல்லை என 'மறக்கமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏ சி டி சி நிறுவனம் தெரிவித்ததோடு, இதற்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. இந்நிலையில் சமீபத்தில் இந்த குளறுபடிகள் குறித்து ஏ சி டி சி நிறுவனத்தின் மீது நம்பிக்கை மோசடி உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் ஏ ஆர் ரகுமான் தரப்பில் இருந்து, டிக்கெட் வாங்கியும் நிகழ்ச்சியை பார்க்கமுடியாமல் நஷ்டமடைந்த ரசிகர்கள் அவர்களின் டிக்கெட் காப்பியை தனக்கு இமெயில் செய்தால் அவர்களுக்கு உரிய பணம் திரும்ப கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த சர்ச்சை ஓய்வதற்குள், ஏ.ஆர்.ரகுமான் மோசடி செய்ததாக மற்றொரு புகார் எழுந்துள்ளது, திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர், கொடுத்துள்ள இந்த புகார் மனுவில்... "கடந்த 2018 ஆம் ஆண்டு, இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக ரூபாய் 29.50 லட்சம் பணத்தை முன்பணமாக ஏ.ஆர்.ரகுமான் பெற்றுக்கொண்டார். பின்னர் மாநாடு நடத்த அனுமதி கிடைக்காததால், நிகழ்ச்சி நடைபெறவில்லை. பின்னர் இதற்கான முன் தொகையை திரும்ப கேட்டபோது அதனை அவர் தரவில்லை என்று கூறியுள்ளனர். மேலும் 29.50 லட்சம் தங்களிடம் மோசடி செய்த ஏ ஆர் ரகுமான் மற்றும் அவரது உதவியாளர் செந்தில் வேலன் மீதும் கொடுத்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் கொடுத்துள்ள புகார் தற்போது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D