தமிழ் சினிமாவில், லேடி சூப்பர் ஸ்டார் என பெயர் எடுத்துள்ளவர் நடிகை நயன்தாரா. இவரின் கால் ஷீட் வேண்டும் என முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பலர் வரிசையில் நிற்கும் நிலையில் சில வருடங்களுக்கு முன், நயன்தாராவை பிரபல இயக்குனர் ஒருவர் ரிஜெக்ட் செய்து விட்டார் என கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார், பிரபல காமெடி நடிகர் விடிவி கணேஷ்.

பல புதிய நடிகைகள், கோலிவுட் மற்றும் டோலிவுட் பக்கம் படையெடுத்தாலும், முன்னணி நடிகர்களின் முதல் சாய்ஸ் நயன்தாராவாக தான் உள்ளார். அவருடைய கால் ஷீட் கிடைக்கவில்லை என்றால் தான் மற்ற நடிகைகள் பக்கம் திரும்புகிறார்கள்.

அந்த வகையில், நயன்தாராவும் அவர், தேர்வு செய்து நடித்து வரும் ஒவ்வொரு படங்களிலும், தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார் என்பது நாம் அறிந்தது தான்.

இந்நிலையில், பிரபல குணச்சித்திர நடிகரும் காமெடி நடிகருமான விடிவி கணேஷ் கொடுத்த பேட்டி ஒன்றில், இயக்குனர் கெளதம் மேனன், சில வருடங்களுக்கு முன் நயன்தாராவை ஒரு படத்தில் நடிக்க வைக்க கமிட் செய்ததாகவும், பின் ஒரு சில காரணங்களுக்காக நயன்தாரா அந்த படத்தில் இருந்து விலக்கப்பட்டார் என தெரிவித்துள்ளார். இந்த தகவல் நயன்தாரா ரசிகர்களை சற்று அதிர்ச்சியடைய வைத்துள்ளது என்றே கூறலாம்.