பாலிவுட் திரையுலகில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் குஷால் பஞ்சாபி. இவர் தன்னுடைய தற்கொலை முடிவுக்கு யாரும் காரணம் இல்லை என கூறி, தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பாலிவுட் திரையுலகை சேர்ந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

37 வயதாகும் குஷால் பஞ்சாபி, நடித்துள்ள CID , Ishq Mein Marjawan போன்ற சின்னத்திரை தொடர்களுக்கு, ரசிகர்கள் மத்தியில், நல்ல வரவேற்பு உள்ளது. ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் கடந்த வியாழக்கிழமை இரவு, பாந்திராவில் தான் தங்கியிருந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரின் தற்கொலை குறித்து போலீசார் தீவிரமாசா விசாரணை செய்து வருகிறார்கள்.  உடலில் ஏதாவது காயங்கள் உள்ளதா என பரிசோதித்து போலீசார் அப்படி எதுவும் இல்லாததால் இது தற்கொலை முடிவு என்பதை உறுதி செய்துள்ளனர்.

குஷால் பஞ்சாபின் மரணம் பாலிவுட் சின்னத்திரை பிரபலங்கள் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.