பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம், பாலிவுட் மற்றும் கோலிவுட் திரையுலக ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

81 வயதாகும் பழம்பெரும் பாலிவுட் நடிகர்அமிதாப் பச்சன் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் இதுவரை அவரது குடும்பத்தினரிடம் இருந்து அவருக்கு என்ன ஆனது, என்ன காரணத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அதிகாரப்பூர்வமாக எதுவும் வரவில்லை. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆனால் செய்தித்தளங்களில் அமிதா பச்சனுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அறிக்கைகளின்படி, அமிதாப் உடல்நலக்குறைவு மற்றும் இதய ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது. வழக்கமான உடல் பரிசோதனைக்கு சென்றபோது, இந்த பிரச்சனை கண்டறியப்பட்டு... உடனடியாக அருவி சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் நலமுடன் உள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அட்மிட் ஆவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, தனது X தள பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், 'டி 4950- நன்றியுணர்வுடன் எப்போதும்..' என போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வருடங்களாகவே அமிதாப் பச்சன் அடுத்தடுத்து பல உடல்நல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமிதாப் தனது மணிக்கட்டில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதே போல் கொரோனா தொற்றினாலும் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின் மீண்டார். மீண்டும் உடல்நல பிரச்சனைகளை சந்தித்துள்ள பிக் பி விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.