80  மட்டும் 90 களில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தவர் பிரபல நடிகை ஷோபனா. 

80 மட்டும் 90 களில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தவர் பிரபல நடிகை ஷோபனா.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நடன கலைஞர், நடன பயிற்சியாளர், மிருதங்க வித்வான், என பல்வேறு திறமைகளை கொண்ட இவர், நடிப்பையும் தாண்டி தன்னுடைய கலை வாழ்வை தொடர்ந்து வருகிறார்.

கடைசியாக, இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கோச்சடையான்' படத்தில், ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தார். பின் முழுமையாக திரையுலகில் இருந்து விலகி, சின்னத்திரை டான்ஸ் நிகழ்ச்சிகளில் நடுவராகவும், பாரத நாட்டிய பயிற்சியிலும் கவனத்தை செலுத்தினார். 

இந்நிலையில் 15 வருடங்களுக்கு முன் 'மகளும்' என்கிற படத்தில் நடிகர் சுரேஷ் கோபிக்கு ஜோடியாக ஷோபனா நடித்திருந்தார். அதை தொடர்ந்து சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய கோச்சடையான் படத்தின் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். தற்போது மீண்டும் நடிகர் சுரேஷ் கோபிக்கு ஜோடியாக நடிக்க உள்ளனர்.

இந்த படத்தின் மூலம் பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு மகன், அனூப் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். பல மலையாள படங்களில் நடித்து புகழ்பெற்ற ஷோபனாவின் ரீ-என்ரியை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.