Asianet News TamilAsianet News Tamil

ShivaShankar | உயிருக்கு போராடும் "மன்மதராஜா" நடன இயக்குனர் ; உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் குடும்பம்

'sivashankar | திருடா திருடி பட "மன்மத ராஜா" பாடலுக்கு நடனம் அமைத்த பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

ShivaShankar Master affected with COVID19 and now in critical condition.
Author
Chennai, First Published Nov 25, 2021, 7:01 AM IST

திரையில் பலராலும் ரசிக்கப்படும் கலைஞர்களின் பரிதாப நிலை தொடர்கதையாகி வருகிறது.சமீபத்தில் துளசி போன்ற நன்கறியப்பட்ட நடிகர்ள் சிகிச்சைக்கு பணமின்றி பரிதாபமாக உயிரிழந்த சோகசம்பவம் நடந்தேறின . இவர்கள் குறித்த செய்தி சமூக வலைதளத்தில் பரவிய பிறகே சிறு நடிகர்களுக்கு தேவையான உதவியை செய்ய பெரிய நடிகர்கள் முன் வருகின்றனர். நடிகர்களுக்கென சங்கம் இருந்தாலும் அதிக சம்பளம் வாங்காத சிறு கலைஞர்களின் நிலை பரிதாபத்திற்கு உரியதாகவே இருக்கிறது.

அந்தவகையில்  தற்போது நடன இயக்குனர் சிவசங்கர் உயிரை காப்பாற்ற அவரது குடும்பம் திரைத்துறையினரிடம் உதவி கேட்டு வருகின்றனர்.  தனுஷ் நடித்த திருடா திருடி படத்தில் இடம்பெற்ற மன்மத ராசா பாடலில் பணியாற்றியதன் மூலம் சிவசங்கரின் புகழ் பட்டிதொட்டியெங்கும் பரவியது. அஜித் நடித்த வரலாறு, சந்தானத்தின் கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்கு துட்டு, பாலாவின் பரதேசி, சூர்யா நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்தார்.

ShivaShankar Master affected with COVID19 and now in critical condition.

தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் 800க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குநராக பணிபுரிந்தவர் சிவசங்கர் மாஸ்டர். பூவே உனக்காக, விஷ்வதுளசி, வரலாறு, உளியின் ஓசை போன்ற படங்களுக்கு சிறந்த நடனாசிரியருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில், சிவசங்கர் மாஸ்டருக்கு கொரோனா ஏற்பட்டதாகவும், அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் திரைத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சிவசங்கர் மாஸ்டரின் மகன் உதவி கேட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள எனது அப்பாவுக்கு உதவுங்கள். தொழில்துறையினர் அவருக்கு உதவுவார்கள் என்று நம்புகிறேன். என அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த பதிவு சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.


 

 

Follow Us:
Download App:
  • android
  • ios