தற்போதைய கேப்டன் அர்ச்சனா கூறிய கடுமையான வார்த்தைகளாலும் மனக்குழப்பதினாலும், வெட்டு ஒன்று துண்டு இரண்டு என பேசும் பாலா முதல் முறையாக கண் கலங்கி அழுதது பார்க்கும் அணைத்து பிக்பாஸ் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

இதை தொடர்ந்து வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில், தனியாக இருக்கும் பாலாவிடம் ஷிவானி வந்து பேசுகிறார். பாலா அழுதது குறித்து கேட்க, நான் எமோஷனல் என்பதை அவர் தெரிவிக்கிறார். 

நான் திமிராக பேசுவதால், எல்லாமே திமிராக தான் செய்வேன் என்பதை எல்லோரும் செட் பண்ணிட்டாங்க என சொல்கிறார் பாலா. இதற்கு ஷிவானி, நீங்கள் நேர்மையாக இருக்கிறீர்கள், ஆனால் அதனை எடுத்து கூறும் முறை திமிராக உள்ளது என ஆறுதல் கூறுகிறார்.

பின்னர் சம்யுக்தவிடம் வந்து பாலா பேசும் போது, ஷிவானியிடம் பேசியது பற்றி கூறி, என்ன ஓகே ஆகிவிட்டதா என கேட்கிறார். பின்னர் எது கேட்டாலும் தெளிவா கேளுங்க இந்த வீட்டுல என்று பாலா சிரித்து கொண்டே கூற, சுரேஷ் ஏதோ கிண்டல் செய்வது தற்போதைய புரோமோவில் இடம் பெற்றுள்ளது.

இன்றைய புரோமோக்களை வைத்து பார்க்கும் போது, பிரச்சனைகளுக்கு நடுவே, ஷிவானியிடம் பாலா இடையே சுவாரஸ்யமான பேச்சுகள் இருக்கும் என தெரிகிறது... என்னதான் நடக்குது  என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பிக்பாஸ் புரோமோ இதோ...