Asianet News TamilAsianet News Tamil

மை ஓமன குட்டி... கேரளா சேலையில் ரசிகர்களை சுழட்டி போட்ட ஷிவானி..! சுற்றித்தான் போடணும்..!

பிக்பாஸ் ஷிவானி தற்போது கேரளத்து பெண் குட்டியாக மாறி, வெளியிட்டுள்ள வீடியோவிற்கு நெட்டிசன்கள் தாறுமாறாக லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
 

shivani narayanan kerala saree latest photo gallery
Author
Chennai, First Published Jun 5, 2021, 7:45 PM IST

பிக்பாஸ் ஷிவானி தற்போது கேரளத்து பெண் குட்டியாக மாறி, வெளியிட்டுள்ள வீடியோவிற்கு நெட்டிசன்கள் தாறுமாறாக லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

சீரியல் மூலம் ஏற்கனவே, ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்து விட்ட ஷிவானி, அடுத்ததாக வெள்ளித்திரை வாய்ப்புகளுக்கு அடி போட்டு வருகிறார். பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறிய ரம்யா பாண்டியன், சம்யுக்தா, ஆரி ஆகிய சிலபேருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தாலும், இன்னும் கேப்ரியல்லா, ஆஜித், பாலாஜி முருகதாஸ், ஷிவானி போன்றோர் நடிக்கும் படங்கள் குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்புகளும் வெளியாகவில்லை.

shivani narayanan kerala saree latest photo gallery

சீரியலில் நாயகியாக இருந்து, வெள்ளித்திரைக்கு சென்று பிரியா பவானி, வாணி போஜன் போன்ற நாயகிகள் இன்று பல படங்களில் வரிசையாக நடித்து வருவதை போன்று, ஷிவானிக்கும் வாய்ப்புகள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் கதவை தட்டும் என எதிர்பார்த்தவருக்கு சற்று ஏமாற்றமே மிஞ்சியது. அதற்க்கு ஏற்ற போல், கொரோனா முதல் அலையை தொடர்ந்து இரண்டாவது அலையும் அதன் கொடூர முகத்தை காட்டி வருவதால், தயாரிப்பாளர்கள் பலர் பணம் போட்டு படம் எடுத்தாலும் அதை ரிலீஸ் செய்ய முடியாமல் போய் விடுமோ என்கிற பயத்திலேயே உள்ளனர்.

shivani narayanan kerala saree latest photo gallery

பட வாய்ப்புகளை பிடிக்க தொடர்ந்து விடா முயற்சியை கைவிடாது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஷிவானி... தற்போது சற்று வித்தியாசமாக, கேரளத்து பெண் குட்டியாக மாறி கியூட் ரியாக்ஷனை வெளிப்படுத்தி, வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று நெட்டிசன்களால் அதிக அளவு பார்க்கப்பட்டு வருகிறது. நெட்டிசன்களும் ரசிகர்களும், ஷிவானியை 'மை ஓமன குட்டி', எல்லாரும் சுத்தி போடுங்க என... காமெண்ட்ஸையும் லைக்குகளையும் குவித்து வருகிறார்கள்.

படு வைரலாக பார்க்கப்படும் அந்த வீடியோ இதோ.. 
 

 

Follow Us:
Download App:
  • android
  • ios