பிக்பாஸ் பிரபலமும், சீரியல் நடிகையுமான ஷிவானி, திடீர் என விஜய் சேதுபதியை சந்தித்து அவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட ரசிகர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களையும் லைக்குகளை இந்த புகைப்படத்திற்கு குவித்து வருகிறார்கள். 

பிக்பாஸ் பிரபலமும், சீரியல் நடிகையுமான ஷிவானி, திடீர் என விஜய் சேதுபதியை சந்தித்து அவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட ரசிகர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களையும் லைக்குகளை இந்த புகைப்படத்திற்கு குவித்து வருகிறார்கள்.

ஷிவானி சீரியலில் அறிமுகமாகி இருந்தாலும், தற்போது வெள்ளித்திரை பட வாய்ப்புகளை கைப்பற்றுவதில் அதிக முனைப்பு காட்டி வருகிறார். சில இயக்குனர்கள் இவரிடம் கதை கூறி வந்தாலும், மனதிற்கு பிடித்த கதையையும், நல்ல கருத்துள்ள படங்களையும் மட்டுமே தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். இதன் காரணமாகவே இதுவரை அம்மணி ஒரு படத்தில் கூட நடிப்பதாக அதிகார பூர்வ தகவல் வெளியாகவில்லை.

அதே நேரத்தில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அண்மைய காலமாக ஒரே மாதிரி புகைப்படங்களை வெளியிடாமல்... மாடர்ன் டிரஸ், பாவாடை தாவணி, காட்டன் சேலை என கட்டி தன்னுடைய அழகை மெருகேற்றி கொண்டே செல்கிறார். இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதத்தில் இவரது புகைப்படங்கள் உள்ளதாகவும் ரசிகர்கள் பலர் விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பிரபல நடிகர் விஜய் சேதுபதியை ஷிவானி சந்தித்துள்ளார். அப்போது அவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, 'Man of Simplicity என விஜய் சேதுபதியை புகழ்ந்து ஒரு பதிவு போட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் ஷிவானியும் மிகவும் எளிமையாக ஒரு நீல நிற டாப் அணிந்து, பவ்யமாக விஜய் சேதுபதி பக்கத்தில் நிற்கிறார். இந்த புகைப்படம் தற்போது ஷிவானி மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

View post on Instagram