மத்திய அழகை காட்டியபடி புஷ்பா ஸ்ரீவள்ளி பாடலுக்கு நடனமாடியுள்ள வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்..

தன்னுடைய 17 வயதிலேயே சீரியல் ஹீரோயினாக விஜய் தொலைக்காட்சியில் அறிமுகமாகி, கலக்கியவர் ஷிவானி. இவர் நடித்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சின்னத்திரையில் சேலை கட்டிய குயிலாக வலம் வந்த ஷிவானி, லாக்டவுன் சமயத்தில் திடீர் என மாடர்ன் உடைக்கு மாறி, இன்ஸ்டாகிராம் பக்கத்தையே கவர்ச்சியால் தீ மூட்டினார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சீரியலை தாண்டி ஷிவானியை, ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைய செய்தது என்றால், அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு, காதல் கிசுகிசுவில் சிக்கினாலும், நாசுக்காக அதில் இருந்து நகர்ந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த பாப்புலாரிட்டி காரணமாக, அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அதன்படி லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம், பொன்ராம் இயக்கத்தில் ஒரு படம், ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ரீமேக் படம் என அடுத்தடுத்து பிசியாக நடித்து வருகிறார்.

இதுதவிர வெற்றிக்கு ஜோடியாக பம்பர், வடிவேலுவின் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார் ஷிவானி. இவ்வாறு நடிப்பில் பிசியாக இருந்தாலும், இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இயங்கி வருகிறார்.

ரசிகர்களை கவரும் விதமாக அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் ஷிவானி. மாடர்ன், டிரெடிஷனல் என எந்தவித உடையிலும் கவர்ச்சியை தூக்கலாக காட்டி இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகம். அந்த வகையில், தற்போது கருப்பு நிற காட்டன் சேலையில் மொத்த அழகையும் காட்டியபடி செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் ஆரஞ்சு கலர் உடையில் மத்திய அழகை காட்டியபடி புஷ்பா ஸ்ரீவள்ளி பாடலுக்கு நடனமாடியுள்ள வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்..

View post on Instagram