Shirda Kapoor will be shifted to Saina

புகழ்பெற்ற பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் சாய்னா நேவாலாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

கடந்த 2012-ஆம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியா சார்பில் விளையாடிய சாய்னா நேவால் தங்கப் பதக்கம் வென்றார்.

இவரின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க நீண்ட நாள்களாக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இப்படத்தில் 'சாய்னா' கதாப்பாத்திரத்தில் நடிக்க ஷ்ரத்தா கபூர் ஒப்பந்தமாகி உள்ளார்.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஷ்ரத்தா கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பாலிவுட் பிரபல இயக்குனர் அமோல் குப்தே இயக்கவிருக்கும் இப்படத்தை பூஷன் குமார் தயாரிக்க இருக்கிறார்.

இதுவரை தனது திரையுலக பயணத்தில் சாய்னா திரைப்படம் மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும் எனவும், உலகின் நம்பர்.1 வீராங்கணையான சாய்னா கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். அதற்காக தான் தீவிரமாக தயராகி வருவதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் ஷ்ரத்தா.

விரைவில் 'சாய்னா' படத்திற்கான பணிகள் துவங்கவிருப்பதாகவும், இப்படம் 2018-ஆம் ஆண்டு திரையரங்குகளை அதிரவைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தற்போது மும்பை நிழலுக தாதா தாவூத் இப்ராஹிமின் தங்கையான ஹசீனாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ஷ்ரத்தா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.