இந்த படத்தில் இடம் பெற்ற புட்ட பொம்மா என்ற பாடலுக்கு இடுப்பை வளைத்து நெளித்து ஷில்பா ஷெட்டி போட்டிருக்கும் ஆட்டம் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. 

பாஜிகர் என்ற இந்தி படம் மூலம் அறிமுகமானதில் இருந்து பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என அனைத்து மொழிகளையும் ஒரு கலக்கு கலக்கியவர் நடிகை ஷில்பா ஷெட்டி. பல முறை புறக்கணிக்கப்பட்ட போதும், தனது திறமையால் மீண்டும், மீண்டும் திரைத்துறையில் தனி இடம் பிடித்தார். 2007ம் ஆண்டு பிரிட்டீஷ் தொலைக்காட்சியில் வெளியான பிக் பிரதர் தொலைக்காட்சி மூலம் உலக புகழ் பெற்றார் ஷில்பா ஷெட்டி. 

பிரபுதேவாவுடன் நடித்த மிஸ்டர் ரோமியோ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். யோகா மற்றும் உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் கொண்ட ஷில்பா ஷெட்டி 44 வயதிலும் தனது கட்டுடலை சிக்கென பராமரித்து வருகிறார். அதைப்பார்த்து இப்போ இருக்கும் இளம் நடிகைகள் பொறாமையில் பொசுக்குகின்றனர். 

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி போட்டோக்களையும், ஹாட் போட்டோ ஷூட்களையும் பகிர்ந்து வரும் ஷில்பா ஷெட்டி, தற்போது டிக்-டாக்கில் செம்ம பிரபலமாகிவிட்டார். தெலுங்கில் வெளியாகி செம்ம ஹிட்டான அல்லு அர்ஜூன் பட பாடலுக்கு செமையாக குத்தாட்டம் போட்டுள்ளார். 

திரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் 'அல வைகுந்தபுரம்லு'. இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம் பெற்ற புட்ட பொம்மா என்ற பாடலுக்கு இடுப்பை வளைத்து நெளித்து ஷில்பா ஷெட்டி போட்டிருக்கும் ஆட்டம் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.