மும்பையில் பல கோடி மதிப்புள்ள ஹோட்டலை விஜய் பட நடிகை ஷில்பா ஷெட்டி திடீரென மூடுவதாக அறிவித்துள்ளார். அதன் பின்னணி பற்றி பார்க்கலாம்.

Shilpa Shetty Restaurant Closure : நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீதான மோசடி வழக்குக்கு மத்தியில், மும்பையின் பாந்த்ராவில் உள்ள பிரபல உணவகம் பாஸ்டியன் மூடப்படுவதாக ஷில்பா ஷெட்டி அறிவித்துள்ளார். இந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஷில்பா ஷெட்டியின் ஹோட்டல் மூடப்பட்டது

இன்ஸ்டாகிராம் பதிவில், ஷில்பா ஷெட்டி குறிப்பிட்டுள்ளதாவது : 'இந்த வியாழன் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. மும்பையின் மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்றான பாஸ்டியன் பாந்த்ராவுக்கு நாங்கள் பிரியாவிடை கொடுக்கிறோம். எண்ணற்ற நினைவுகள், இரவு வாழ்க்கை மற்றும் நகரத்தின் இரவு வாழ்க்கையை வடிவமைத்த தருணங்களை வழங்கிய இந்த இடம் இப்போது இறுதி வணக்கம் செலுத்துகிறது. இந்தப் புகழ்பெற்ற இடத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில், எங்கள் நெருங்கிய கூட்டாளிகளுக்காக ஒரு சிறப்பு விருந்தை ஏற்பாடு செய்துள்ளோம். பாஸ்டியன் பாந்த்ராவுக்கு விடைபெறும் அதே வேளையில், எங்கள் வியாழன் இரவு சடங்கு அடுத்த வாரம் பாஸ்டியன் அட் தி டாப்பில் புதிய அனுபவங்களுடன் தொடரும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

உணவகம் மூடப்படுவதற்கான காரணம் என்ன?

ஷில்பா ஷெட்டி மற்றும் உணவக உரிமையாளர் ரஞ்சித் பிந்த்ரா ஆகியோர் பாஸ்டியன் பாந்த்ராவின் இணை உரிமையாளர்கள். 2016 ஆம் ஆண்டில் இந்த உணவகம் தொடங்கப்பட்டது. ஊடக அறிக்கைகளின்படி, மோசடி வழக்கில் சிக்கியதை அடுத்து ஷில்பா இந்த உணவகத்தை மூடுகிறார். ஷில்பா மற்றும் அவரது கணவர் ராஜ் 60 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்ததாக தீபக் கோத்தாரி என்ற நபர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த வழக்கு தம்பதியரின் நிறுவனமான பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் தொடர்புடையது. தற்போது பொருளாதாரக் குற்றப்பிரிவு (EOW) இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

நடிகை ஷில்பா ஷெட்டி, பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் தமிழிலும் விஐபி போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இவர் குஷி படத்தில் நடிகர் விஜய் உடன் சேர்ந்து ஆடிய மேகரீனா பாடல் இன்றளவும் ரசிகர்களின் வைஃப் மெட்டீரியலாக இருந்து வருகிறது. நடிகை ஷில்பா ஷெட்டி உணவகம் மட்டுமின்றி, ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளராகவும் இருந்தார். இவர் உரிமையாளராக இருந்தபோது தான் அந்த அணி ஐபிஎல் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.