கோவாவில் நடைபெறும், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜாக்கி பக்னானியின் சங்கீத் நிகழ்ச்சியில் நடிகை ஷில்பா ஷெட்டி கணவருடன் ரொமான்டிக்காக ஆட்டம் போட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜாக்கி பாக்னானி இருவரும், கடந்த 3 வருடங்களாகவே டேட்டிங் செய்து வந்த நிலையில், இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள உள்ளதை உறுதி செய்தனர். அந்த வகையில் இவர்களின் திருமணம் இன்று (பிப்ரவரி 21 ஆம் தேதி) கோவாவில் நடந்து முடிந்தது. இவர்களின் திருமணம் குறித்து சில தகவல்கள் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் வெளியாகி வந்ததையும் பார்க்க முடிந்தது. மேலும் இவர்களின் திருமணத்தில் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
![]()
தற்போது இவர்களின் திருமண ஏற்பாட்டின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், மற்றும் சங்கீத் நிகழ்ச்சியில் பிரபலங்கள் டான்ஸ் ஆடிய போது எடுக்கப்பட்ட வீடியோ போன்றவை, அவ்வப்போது வெளியாகி வருகிறது.
குறிப்பாக திருமணத்திற்கு முந்தைய சடங்குகளில் ஒன்றான சங்கீத் நிகழ்ச்சி நேற்று (பிப்ரவரி 20 ஆம் தேதி) துவங்கியது. இதில் பாலிவுட் திரையுலகை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு ரகுல் - ஜாக்கி தம்பதியை வாழ்த்தியதோடு, அவர்களை உச்சாகப்படுத்தும் விதமாக மேடையில் டான்ஸ் ஆடி உள்ளனர்.
![]()
அந்த வகையில், நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் ஸ்பெஷல் டான்ஸ்... அங்கிருந்த மேடையை அலங்கரித்துள்ளது. கருப்பு நிற உடையில், மிகவும் ஸ்டைலிஷாகவும் ரொமான்டிக்காகவும் இருவரும் டான்ஸ் ஆடி உள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
