sherya reddy acting andaava kanoom movie

விஷால் நடித்த 'திமிறு', பிரகாஷ்ராஜ் நடித்த 'காஞ்சிவரம்', தங்கர்பச்சானின் 'பள்ளிக்கூடம்'உள்பட ஒருசில படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரேயா ரெட்டி. இவர் எஸ்.எஸ். மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். அப்போதே இவருக்கு நிறைய ரசிகர் பட்டாளம். பின் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த போது ரசிகர் பட்டாளம் அதிகரித்தது. விஷாலுடன் நடித்து கொண்டிருக்கும் போதே, அவரது சகோதரர் ஆண்டு விக்ரம் கிருஷ்ணாவை கடந்த 2008ஆம் திருமணம் செய்தார். பின்னர் திரையுலகில் இருந்து ஒதுங்கியிருந்த ஸ்ரேயா ரெட்டி தற்போது மீண்டும் ரீஎண்ட்ரி ஆகி நடித்துள்ள படம்'அண்டாவ காணோம்'. இது என்ன பெயர் என கேட்பவர்களுக்கு படக்குழு அதை திரையில் பாருங்கள் என சொல்கிறார்கள். மீண்டும் படங்களில் தொடர்ந்து நடிப்பீர்களா என்றால் நல்ல கதை அம்சம் உள்ள படங்கள் அமைந்தால் மட்டும் நடிப்பேன் என்கிறார்.

மேலும் 'அண்டாவ காணோம்' என வித்தியாசமான தலைப்பில் உருவாகி வந்த இந்த படத்தின் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ரிலீஸ் விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் பாடல்கள் சென்னையில் உள்ள ஒரு பிரபல பிரிவியூ திரையரங்கில் வரும்26ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு வெளியாகும் என்றும் அதனை தொடர்ந்து இந்த படத்தின் டிரைலரும் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு கோலிவுட்டில் முன்னணி பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.