கடந்த இரண்டு சீசனை விட, மூன்றாவது சீசனில் சண்டை சச்சரவுக்கு மட்டும் அல்ல, ரொமான்ஸுக்கும் பஞ்சம் இல்லை. ஒரு பக்கம் நான்கு பெண்களிடம் வாண்டடாக சென்று, மொக்கை போட்டு வருகிறார் கவின். அதிலும் லாஸ்லியாவை இவர் தேடி தேடி சென்று, பேசுவது பிக்பாஸ் உள்ளே உள்ள சில போட்டியாளர்களுக்கு மட்டும் அல்ல, இளைஞர்கள் பலருக்கும் இவர் மீது கோபத்தை வரவைத்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த நிலையில் தற்போது தர்ஷன் அவரை விட 10 வயது மூத்த, போட்டியாளரும் நடிகையுமான ஷெரினிடம் ரொமான்ஸ் செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளது. 

இந்த ப்ரோமோவின் ஆரம்பத்திலேயே... "நான் ஷெரின் டார்லிங்கை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் என்றும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததும் ஷெரின் எனக்கு தேவதை போல் தெரிந்ததாகவும் அந்த அழகை பார்த்ததும் இனிமேல் சாகிற வரை சன்னியாசியாகவே இருப்பேன் என்று கூறுகிறார் தர்ஷன்".

மேலும் ஷெரினிடம் தர்ஷன் ரொமான்ஸ் செய்யும் காட்சியை வைத்து இப்போதே நெட்டிசன்கள் என்னடா நடக்குது அங்க, என இருவருடைய வயதை சுட்டி காட்டி கலாய்க்க துவங்கி விட்டனர். ஒருவேளை இது டாஸ்காக இருக்கவும் வாய்ப்புள்ளது ஏன் அநியாயத்துக்கு ஷெரின் மீது ரொமான்ஸ் மழை பொழிகிறார் தர்ஷன் என இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும்.