இயக்குநர் அட்லியின் அடுத்த படத்தில் நடிப்பதற்காகக் காத்திருக்கிறார் என்று சொல்லப்பட்ட இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக் கான், தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு ‘அசுரன்’பட ரீமேக்கில் நடிக்கவிருப்பதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச்செய்தியால் இயக்குநர் அட்லி வட்டாரம் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளது.

கடந்த அக்டோபர் 4ம் தேதி ரிலீஸாகி இன்றுவரை சூப்பராக ஓடிக்கொண்டிருக்கும் அசுரன் படம் தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் ஆக உள்ளது. இந்த மூன்று மொழிகளுக்கு கதை உரிமையை விற்ற வகையில் மட்டும் தயாரிப்பாளர் தாணு பல கோடிகள் ஜாக்பாட் அடித்துள்ளார். இந்நிலையில் இதன் இந்தி ரீமேக்கில் தனுஷ் ஏற்ற சிதம்பரம் பாத்திரத்தில் ஷாருக் கான் நடிக்க ஆர்வமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்காக சென்னை வந்திருந்து அசுரன் படம் பார்த்த ஷாருக் கானின் நெருங்கிய நண்பரும் பிரபல இயக்குநருமான கரண் ஜோகர் தனது ட்விட்டர் பக்கத்தில்,..., "அசுரன் என்ன ஒரு திரைப்படம் !! உங்களைப் புரட்டிப்போடும். முழுவதும் கவர்ந்துவிட்டது.வெற்றிமாறனின் கலை நுணுக்கம், கதை சொல்லும் விதத்தில் மிரண்டு விட்டேன். தனுஷ் அற்புதம் என்று சொல்வதையும் மிஞ்சி விட்டார். அட்டகாசமான நடிப்பு. அவரது புயலுக்கு முன்னே அமைதி பாணி நடிப்பு ஈடு இணையற்றது. தயவுசெய்து பாருங்கள். சினிமாவின் வெற்றி" என்று பாராட்டித்தள்ளியிருந்தார்.

‘பிகில்’பட ரிலீஸுக்கு முன்னர் இயக்குநர் அட்லியின் இயக்கத்தில் நடிப்பதற்காக ஷாருக் காத்திருக்கிறார் என்று பல வட இந்திய முன்னணி இணையதளங்கள் தொடர்ந்து எழுதி வந்தன. ஆனால் தற்போது ‘அசுரன்’ரீ மேக்கில் ஷாரு நடிக்கவிருப்பதாக செய்திகள் வருவதால் அட்லி ஆடிப்போயிருப்பதாகத் தகவல்.