Asianet News TamilAsianet News Tamil

ஆரம்பமே அசத்தல்... ஷாருகான் - நயன்தாரா படத்தின் வேற லெவல் அப்டேட் கொடுத்த அட்லீ!

இயக்குனர் அட்லீ, ஷாருகான் மற்றும் நயன்தாராவை வைத்து இயக்க உள்ள, பாலிவுட் படத்தின் டீசர் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

sharukhan adn nayanthara bollywood movie latest update
Author
Chennai, First Published Aug 5, 2021, 1:42 PM IST

இயக்குனர் அட்லீ, ஷாருகான் மற்றும் நயன்தாராவை வைத்து இயக்க உள்ள, பாலிவுட் படத்தின் டீசர் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர்களில் ஒருவர் அட்லீ. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனரான இவர் 'ராஜா ராணி'  படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்திற்கு அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில், என தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார். என்னதான் அட்லீ மற்ற படங்களைப் பார்த்து காப்பி அடிக்கிறார் என்று குற்றச்சாட்டுக்கள் இருந்து வந்தாலும் இவர் இயக்கிய படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. 

sharukhan adn nayanthara bollywood movie latest update

இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக பாலிவுட் சினிமா கால் பாதிக்க ஆயத்தமானார் அட்லீ. அந்த வகையில் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் உறுதி செய்யப்பட்டது. தற்போது ஷாருகான் நடித்து வரும் படங்களை முடிந்த பின், அட்லீ இயக்கத்தில் இந்த வருடமே நடிக்க துவங்குவார் என நம்பகமான தகவல்களும் வெளியாகியது.

sharukhan adn nayanthara bollywood movie latest update

கொரோனா பிரச்சனை காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு சற்று தாமதமாகிய போதிலும், கடந்த வாரம் இந்த படத்தின் டீசர் ஷூட்டிங் மும்பையில் நடந்ததாகவும், இதில் நடிகை நயன்தாராவும் கலந்து கொண்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் சற்று முன்னர், ஆரம்பமே அசத்தல் என ரசிகர்கள் புகழும் அளவிற்கு, படப்பிடிப்பை துவங்குவதற்கு முன்பே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக... இந்த படத்தின் டீசர் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

sharukhan adn nayanthara bollywood movie latest update

இந்த படத்தின் நாயகி நயன்தாரா என்பதும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் என்பது மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் 15 ஆம் தேதி, படத்தின் ஒட்டு மொத்த விவரங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இளம் வயதிலேயே, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து படம் இயக்கம் அட்லீக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளம் மூலமாக தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். 


 

Follow Us:
Download App:
  • android
  • ios