கிறிஸ்மஸ் மற்றும் அரையாண்டு பள்ளி விடுமுறையை ஒட்டி 5 தமிழ்ப் படங்களுடன் ஒரு கன்னட டப்பிங் படம் மற்றும் ஷாருக் கானின் ’ஜீரோ’ இந்திப்படம் உட்பட 7 படங்கள் ரிலீஸாவதால் அனைத்துப் படங்களுக்குமே தியேட்டர்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது.

ஆனால் இந்த நெருக்கடிகளையும் மீறி ஷாருக் கானின் ‘ஜீரோ’ படத்துக்கு சென்னையில் மட்டும் ஒரு நாளைக்கு 67 காட்சிகள் கிடைத்திருப்பதாக அதிர்ச்சித் தகவலை திரையுலக மீடியேட்டர்  ஒருவர் கூறியுள்ளார்.

ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் கத்ரினா கைஃப், அனுஷ்கா ஷர்மா ஆகிய இரட்டை நாயகிகளுடன் ஷாருக் இப்படத்தில் குள்ளராக நடித்துள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியும் இப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் வருகிறார். ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இப்படத்தின் சென்னை வசூல் உடன் ரிலீஸாகும் அத்தனை படங்களின் மொத்த வசூலை விட அதிகமாக இருக்கும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் நம்புவதாலேயே அப்படத்திற்கு சென்னையில் இவ்வளவு காட்சிகள் கிடைத்ததற்கு காரணம் என்கிறார்கள்.