விஜயின் ‘பிகில்’படப்பிடிப்பு மும்பைக்கு ஷிஃப்ட் ஆவதற்குக் காரணமே இதில் இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் ஒரு பாடலுக்கு நடனமாடவிருப்பதே என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தீபாவளி ரிலீஸை ஒட்டி இறுதிக்கட்டப் படப்பிடிப்பை நெருங்க விருக்கும்  பிகில் படக்குழு இன்னும் ஒரு சில தினங்களில் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக மும்பை செல்லவிருக்கிறது.  இது முதலில் தற்செயலான செய்தியாகப் பார்க்கப்பட்ட நிலையில் இப்படத்தில் ஒரு பாடல்காட்சியில் விஜயுடன் இணைந்து ஷாருக் கான் ஆடவிருக்கும் ரகசிய செய்தி வெளியே கசிந்துள்ளது.

சில தினங்களுக்கு முன்பு மும்பையில் நடந்த ஐபிஎல் மேட்ச் ஒன்றின்போது இயக்குநர் அட்லியும் ஷாருக் கானும் சந்தித்துப்பேசிய புகைப்படங்கள் வெளியானபோது ஷாருக் கான் பிகில் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது. அச்செய்திகள் உறுதியாக நிலையில் அட்லியின் அடுத்த பட ஹீரோவே ஷாருக் கான் தான்.அவருக்கு கதை சொல்லி ஓகே பண்ணிவிட்டார் என்றார்கள். தற்போது இந்த ஒரு பாடலுக்கு ஷாருக் ஆடும் செய்தி வந்துகொண்டிருக்கிறது. இதுவாவது நடக்கிறதா என்று பார்ப்போம்.