shartha kopur join prabas

இயக்குனர் ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்துப் பிரபாஸ் நடிக்கும் அடுத்த திரைப்படம் சாஹோ. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வேலைகள் நிறைவு பெற்றிருக்கும் சூழலில், படத்தின் கதாநாயகியாக பாலிவுட் நாயகி ஸ்ரத்தா கபூர் உறுதிச் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இந்த திரைப்படத்தை எடுக்க உள்ளனர். தற்போது இத்திரைப்படத்திற்காக மிகப்பெரிய செட்டுகள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி திரைப்பட நகரில் அமைக்கப்பட்டு வருகிறதாம்.

மேலும் இந்த திரைப்படத்தின் கதாநாயகி யார் என பல கேள்விகள் உலவி வந்த நிலையில், அதன் தயாரிப்பாளர்கள் வம்சி மற்றும் பிரமோத், இப்படத்தின் கதாநாயகி ஸ்ரத்தா கபூர் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஆஷிக்-2 படத்தின் மூலம் புகழின் உச்சத்தைத் தொட்ட ஸ்ரத்தா கபூர், இயக்குனர் SS ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்புகளான பாகுபலி திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத, நிறைவான இடத்தைப் பிடித்த பிரபாஸின் காதல் நாயகியாக இதில் நடிக்கிறார்.