ஆஷிக்கி 2  திரைபடத்தில் நடித்ததன் மூலம், பாலிவுட் திரையுலகம்  மட்டும் இன்றி, ஒட்டு மொத்த ரசிகர்கள் கவனத்தையும் இழுத்தவர் ஷர்தா கபூர். தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாலிவுட் படங்களை தேர்தெடுத்து நடித்து வரும் இவர், அடுத்ததாக தமிழ் , தெலுங்கு, மற்றும் இந்தியில் உருவாகிவரும், சாஹோ திரைபடத்தில் நடிகர் பிரபாஸ் ஜோடியாக நடிக்க உள்ளார்.

இந்த திரைப்படம் சுமார் 15௦ கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்காக பிரபாசுக்கு  15 கோடி சம்பளமாக கொடுக்கப்படுவதாக தகவல் கூறப்படும் நிலையில், நடிகை ஷர்தா கபூருக்கு எட்டு கோடி சம்பளம் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை கேள்வி பட்ட மற்ற நடிகைகள் வாயடைத்து போய் உள்ளார்கலாம்.

பாகுபலி திரைபடத்தின் மிக பெரிய வெற்றிக்கு பிறகு இந்த திரைபடத்தில் பிரபாஸ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.