Asianet News TamilAsianet News Tamil

Chennai rain | வீட்டின் முன் நொறுங்கிய கார் ; வீடியோ பதிவிட்ட சாந்தனு!!

மழை மிகவும் தீவிரமாக இருக்கலாம், அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என கூறி நடிகர் சாந்தனு கார் நொறுங்கிய வீடியோவை பதிவிட்டுள்ளார்.

Shanthanu tweet about chennai rain
Author
Chennai, First Published Nov 18, 2021, 4:16 PM IST

தமிழகத்தில் கடந்த வாரம் முழுவதும் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் வெள்ள நீர் தேங்கி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது வெள்ள நீர் வடிந்து மெல்ல மெல்ல மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

 கடந்த 13 ஆம் தேதி தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலில் உருவான இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. சென்னையிலிருந்து 260 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. இது புயலாக மாறும் வாய்ப்பில்லை. தாழ்வு மண்டலம் கரையை கடந்த பிறகு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை பிற்பகலுக்குப் பிறகு மழை குறையத் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கன மழை நேற்றிலிருந்து விட்டுவிட்டு பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே மரங்கள் விழுவதால் சேதம் ஏற்படுள்ளது.

இந்நிலையில் தனது வீட்டிற்கு முன் நின்று கொண்டிருந்த கார் மரம் விழுந்ததால் பலத்த சேதம் அடைந்துள்ளதை வீடியோவாக பதிவிட்டுள்ள நடிகர் சாந்தனு;  மழை தீவிரமாக கூடலாம். அதனால் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என கூறியுள்ளார். 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios