shanker wish for kutram 23 teeam

பெரிய பட்ஜெட் படத்தை விட தற்போது சிறு பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களுக்கு ரசிகர்கள் தங்களுடைய ஆதரவை கொடுத்து வருகின்றனர்.

அப்படிதான் பெரிய அளவில் ஸ்டார் காஸ்டிங் இல்லாமல் இயக்குனர் அறிவழகன் இயக்கி இருந்த குற்றம் 23 படம் மூன்று வாரங்களை கடந்து தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தை பார்த்து விட்டு சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினரை அவரது வீட்டிற்கு அழைத்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். தற்போது அதே போல் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இவருடைய உதவி இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த குற்றம் 23 படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளியுள்ளார்.

மேலும் அருண் விஜய் இந்த படத்தில் நன்றாக நடித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.