’இந்தியன் 2’ படத்தைத் தொடர்வதற்கு டஜன் கணக்கில் பிரச்சினைகள் இருப்பதால், அதை வெயிட்டிங் லிஸ்டில் வைத்துவிட்டு, ஏற்கனவே தயாராக இருக்கும் டபுள் ஹீரோ கதையைக் கையில் எடுக்கலாமா என்று மிகத் தீவிரமாக இயக்குநர் ஷங்கர் யோசித்து வருவதாக அவரது எஸ் பிக்‌ஷர்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முறையாகக் கால்ஷீட் தராமல் கமல் தந்த இம்சைகள் போதாதென்று தயாரிப்பாளர்கள் தரப்பிலும் ஏகப்பட்ட கெடுபிடிகள் கிளம்பியதால் ‘இந்தியன் 2’வை இப்போதைக்குக் கிடப்பில் போட்டுவிட்டு, முன் கூட்டியே தயாராக இருக்கும் டபுள் ஹீரோ சப்ஜெக்டை ஒரு குயிக் டைம் புராஜக்டாக முடித்தால் என்ன என்று யோசித்த ஷங்கர் அது குறித்து தனது உதவியாளர்களிடம் ஆலோசித்திருக்கிறார்.

அப்படத்தில், ‘கடாரம் கொண்டான்’ தவிர்த்து, கொஞ்ச காலமாகவே படங்கள் இன்றி சும்மா இருக்கும் விக்ரமுடன் தளபதி விஜயை உள்ளே கொண்டுவருவதற்கான பேச்சு வார்த்தைகளும் மிக ரகசியமாக நடந்து வருகிறதாம். இவர்கள் இருவரையும் இணைக்க முடிந்தால் ஏறத்தாழ ‘இந்தியன் 2’ அளவுக்கு பிசினஸ் பண்ணிவிட முடியும் என்பதால், தாராளமான பட்ஜெட்டில் சுதந்திரமாக படம் இயக்கமுடியும் என்பது ஷங்கரின் கணக்கு.