’பேட்ட’ ரிலீஸுக்குப்பின்னர்தான் சூப்பர் ஸ்டாரின் ’2.0’ ட்ரைலர் ரிலீஸ் இருக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில், வரும் நவம்பர் 3ம் தேதியே ’ஃபிஃப்த் ஃபோர்ஸ் இஸ் கமிங்’ என்ற அறிவிப்புடன் ரஜினி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்திருக்கிறார் டைரக்டர் ஷங்கர்.

ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் சுமார் ரூ.650 கோடியில் இந்த படம் 3டியில் உருவாகி வருகிறது.

 ஏற்கனவே வெளியிடப்பட்ட இந்த படத்தின் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், படத்தின் டிரைலர் ’பேட்ட’பட ரிலீஸுக்குப்பின்னரே இருக்கும் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை நவம்பர் 3-ஆம் தேதி வெளியிட இருப்பதாக இயக்குனர் சங்கர் அறிவித்திருக்கிறார்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த மெகா பட்ஜெட் பட அறிவிப்பால் சன் பிக்‌ஷர்ஸ் தயாரிக்கும் ‘பேட்ட’ படத்தின் எதிர்பார்ப்பு டல்லடிக்கும் என்பதால் இயக்குநர் ஷங்கர் மீதும் லைகா நிறுவனத்தின் மீது அவர்கள் செம கடுப்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது.