என் கிட்ட மோததே படத்தில் நாயகியாக நடித்துள்ளவர் சஞ்சிதா ஷெட்டி, இவர் ஏற்கனவே விஜய் சேதுபதிக்கு ஜோடியகே சூது கவ்வும், வில்லா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

சமீபத்தில் நடந்த என் கிட்ட மோததே படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சஞ்சித ஷெட்டி பல படங்களில் தான் குடும்பபாங்கான வேடத்திற்கு ஒத்து வர மாட்டேன் என்று தன்னை நிராகரித்து உள்ளார்கள் என வருத்தத்துடன் தெரிவித்தார்.

அதே போல் இந்த படத்தில் தன்னை நிராகரிக்காததற்கு முக்கிய கரகாரணம் தனது மேலாளர் தான் என்றும் அதற்கு அவருக்கு நன்றிகள் தெரிவித்து கொள்வதாக உருக்கமாக தெரிவித்தார் 

மேலும் இந்த படத்தில் நாயகனாக ஒளிப்பதிவாளர் நட்ராஜ், இரண்டாவது நாயகியாக பார்வதி நாயர், ராதா ரவி போன்ற பலர் நாடுகின்றனர். இந்த படத்தை ராமு செல்லப்பா என்கிற அறிமுக இயக்குனர் இயக்குகிறார்.