மறைந்த முதல் அமைச்சரின் வாழ்க்கை வரலாறு தற்போது படமாகி வருகிறது. இந்த படத்தில் முக்கிய வேடமான, அவருடைய தோழி வேடத்தில் நடிக்க, ஆறு எழுத்து கொண்ட பிரபல நடிகை, ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து அந்த நடிகைக்கு தற்போது மிரட்டல் வந்து கொண்டு இருக்கிறதாம். இதனால் வரலாறு படத்தில் நடிப்பதா வேண்டாமா என யோசித்து வருகிறாராம் அந்த நடிகை

தாதாவாக மாறிய நடிகர்:

நடிகர் ஷாம் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் பார்ட்டி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.  அவர் ஒரு ஸ்டைலான தாதாவாக இந்த படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது இந்த படம் பற்றி கூறிய நடிகர் ஷாம், டைரக்டர் வெங்கட் பிரபு இயக்குனர்களை ஈர்க்கும் படம் பண்ணக்கூடியவர் அவருடைய படங்களில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட கால ஆசை. அந்த வாய்ப்பு வந்ததும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட ஏற்றுக்கொண்டு படபிடிப்புக்கு பிஜி தீவுக்கு சென்றேன்.

நான் ஆசைப்பட்ட ஒரு கதாபாத்திரம், என் மனதுக்குப் பிடித்த ஒரு கதை அமைந்தது கூடுதல் மகிழ்ச்சி.  நட்புக்கு மரியாதை கொடுக்கும் அற்புதமான படக்குழுவினர். இந்த படத்தில் நல்ல பெயர் கிடைக்கும் என்று நம்புகிறேன். எத்தனை படங்கள் நடித்தோம் என்பதை விட எவ்வளவு காலம் ரசிகர்கள் மனதில் நிற்கும் படங்களில் நடித்தும் என்பதில்தான் அதிக கவனம் செலுத்தி வருகிறேன் இந்த புத்தாண்டு நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் என்னை பார்க்கலாம் என்று கூறியுள்ளார் நடிகர் ஷாம்.