shalini sister shamily have no movies

விஜயகாந்த் நடித்த 'ராஜநடை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷாமிலி, இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'அஞ்சலி' திரைப்படத்தில் மிகவும் எதார்த்தமான குழந்தையாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தேசிய விருதைப் பெற்றவர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதுவரை, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 30 திற்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த இவருக்கு, கதாநாயகியாக சினிமாவில் நிலைக்க முடியவில்லை.

 தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 4 திரைப்படத்தில் கதாநாயகியாக இவர் நடித்த போதிலும், ஒரு திரைப்படம் கூட வெற்றி பெறவில்லை.

 கோலிவுட் திரையுலகில் உச்ச கட்ட நடிகராக இருக்கும் அஜித்தின் மைத்துனி என்ற போதிலும், இவருக்கு வயது அதிகமாக ஆகிவிட்ட காரணத்தால், எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்புகள் அமையவில்லை என்பது வருத்தம் தான்.

இந்நிலையில் கடந்த ஆண்டு இவர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்த 'வீரசிவாஜி' திரைப்படம் வெளியானது. ஆனால் படம் படுதோல்வி அடைந்ததால் இவருக்கு அடுத்ததாக தமிழில் நடிக்க வாய்புகள் அமையவில்லை. 

இதைத்தொடர்ந்து, சமீபத்தில் தெலுங்கில் நாக சவுரியாவுடன் நடித்த படமும் தோல்வியடைந்ததால், மிகுந்த வருத்தத்தில் உள்ளாராம் ஷாமிலி. இருப்பினும் எப்படியும் ஒரு ஹிட் படமாவது கொடுத்துவிட வேண்டும் என தொடர்ந்து நல்ல கதைகளை கேட்டு வருகிறாராம். மேலும் பலர் வயதாகி விட்டதால், சீக்கிரம் திருமணம் செய்துக்கொள்ளும்படி அட்வைஸ் செய்து வருகின்றனராம்.