சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் எடுக்கப்பட்ட டர்ட்டி பிக்சர்ஸ் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் சாதனை படைத்தது. இதையடுத்து முன்னாள் ஆபாச பட நடிகையான ஷகீலாவின் வாழ்க்கை வரலாறு படமாக மாறியுள்ளது. வண்டிச்சக்கரம் என்ற படத்தில் காமெடி நடிகையாக அறிமுகமான ஷகீலா, மெல்ல ஆபாச படங்களில் நடிக்க ஆரம்பித்து இளைஞர்களின் கனவு கன்னியாக மாறினார். 

ஆபாச நடிகையான ஷீகிலாவின் வாழ்க்கையை ஏன் படமாக எடுக்க வேண்டும் என எக்கச்ச சர்ச்சைகள் எழுந்தனர். இருப்பினும், இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ் இயக்கத்தில் ரிச்சா சதா மற்றும் ராஜீவ் பிள்ளை நடிப்பில் உருவாகியுள்ள ஷகீலா படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. டிரெய்லரில் சில்க் ஸ்மிதா தூக்க மாத்திரை சாப்பிட்டு படுக்கை அறையில் இறந்து கிடப்பதில் இருந்து காட்சிகள் ஆரம்பமாகிறது. 

ஷகீலாவின் பள்ளி பருவம் மற்றும் ஆபாச நடிகையாக நடிக்க ஆரம்பித்தது முதல் நடிகையாக மாறியது வரை பல்வேறு விஷயங்கள் காட்டப்பட்டுள்ளன. அங்காங்கே படுக்கையறை காட்சிகள், ஆபாச பட ஷூட்டிங்குகள் என ஆபாச காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இந்த ட்ரெய்லர் வெளியானதை அடுத்து #Shakeela என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.