ஊருக்கெல்லாம் நிழல் கொடுக்கிற ஆலமரம். ஆனா அந்த ஆலமரம் மொட்டை வெயில்லதான காயவேண்டியிருக்கு’ என்றொரு உருக்கமான வஜனம் ஒன்றை சமீபத்திய தல படமான விஸ்வாசத்தில் கேட்டு கண்ணீர் வடித்தோம் அல்லவா? அதையும் தாண்டிப் புனிதமான செய்தி இது.

ஒரு காலத்தில வாலிப வயோதிக நண்பர்களுக்கு ஊக்க மருந்தாக இருந்தவர் ஷகீலா. இவரது படங்கள் ஓடுவதைப் பார்த்து  சூப்பர் ஸ்டார்கள் பயந்த காலமும் இருந்தது. ஷகீலா படம் என்றால் கவர்ச்சி கரை கடந்து ஓடும் என்கிற நம்பிக்கை இருந்தது. தென்னிந்தியா முழுக்கவே ஷகீலாவுக்கு ரசிகர் பட்டாளங்கள் இருந்தன. இந்த ஷகீலாவுக்கு ஒரு லவ் ஃபெயிலியர் இருந்தது என்று சொன்னால் மனசு கனக்கிறது அல்லவா?யெஸ்...அவருக்கு மலையாள தயாரிப்பாளர் மீது ஒரு கண் இருந்தது என்பதை ஷகீலாவே சொல்லியிருக்கிறார்.“சோட்டா மும்பை என்கிற படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தேன்.அந்த படத்தில் மோகன்லால் ஹீரோ. 2007 ல் படப்பிடிப்பு.அந்த சமயத்தில் என்னுடை அம்மாவுக்கு உடல் நலமில்லாமல் அவசரமாக அறுவை சிகிச்சை பண்ண வேண்டிய நிலைமை.கையில் காசு இல்லை.என்ன பண்றது? படத்தின் தயாரிப்பாளரான மணியன் பிள்ள ராஜுவிடம் போய் பணம் கேட்டேன். நிலைமையை தெரிந்து கொண்ட அவர் எனக்கு சம்பளத்தை முன்னதாகவே மொத்தமாக கொடுத்து விட்டார். அப்போதுதான் அவர் மீது எனக்கு காதல் வந்தது. உருகி உருகி காதல் கடிதம் எழுதினேன்.ஆனால் காதல் கை கூடாமல் போயிருச்சி.என்ன பண்றது?” என்கிறார் ஷகீலா. தயாரிப்பாளர் மணியன்பிள்ளராசு என்ன சொல்கிறார். “எனக்கு தெரியாது.அவர் எனக்கு எழுதிய கடிதமும் கிடைக்கல.”என சுருக்கமாக சொல்லி ஒதுங்கிவிட்டார். ஆக 12 வருடங்களாக காற்றில் எங்கோ திசை தெரியாமல் அலைந்துகொண்டிருக்கிறது மணியன் பிள்ளைக்கு ஷகீலா எழுதிய காதல் கடிதம்.