இனிமேல் துவங்கப்படவிருக்கிற ஏழெட்டு ஜெயலலிதா வரலாற்றுப் படங்களையும் சேர்ந்தால் 2019க்கு வெளியாகவிருக்கும்  வரலாற்றுப் படங்களின் எண்ணிக்கை ஒரு டஜனையும் தாண்டும்போல. மற்ற வரலாற்றுப் படங்கள் எடுப்பவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் டென்சன் என்று அவற்றில் ‘ரிலாக்ஸுக்கு நாங்க கியாரண்டி’ என்று இறங்கவிருக்கும் ஒரே படம் ’ஷகீலா’வின் சுயசரிதைப்படம்.

’நான் ஒரு திறந்த புத்தகம் என்று எத்தனையோ நடிகைகள் பேட்டி அளித்திருக்கலாம். அதில் ஓரளவுக்கு உண்மையின் பக்கத்தில் இருந்தவர் என்றால் அது நடிகை ஷகீலாதான். ‘80ல் துவங்கி 90 களின் துவக்கம் வரை தமிழ், மலையாள ரசிகர்களின் தூக்கத்தை தனது முந்தானையில் முடிந்து வைத்திருந்தவர் ஷகீலா. இவரது வாழ்க்கைப் புத்தகத்தின் சுவாரசியமான பக்கங்களைப் படம் பிடித்திருக்கும் இந்திரஜித் லங்கேஷ் ஒருவழியாக ரிலீஸுக்குப் பக்கத்தில் வந்துவிட்டார்.

அதன் அறிவிப்பாக புத்தாண்டை ஒட்டி சியர்ஸ் சொல்லும் விதமாக மது பாட்டிலில் ஷகீலா நனைந்துமயக்கும் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. கோடை காலத்தை குளிர்விக்க தியேட்டருக்கு வந்துவிடுவோம் என்ற அறிவிப்பும் தரப்பட்டுள்ளது.

‘ஷகீலாவின் கதை என்பதால் அவரளவுக்கு ஆபாசமாக நடிக்க முடியுமா என்ற குழப்பம் துவக்கத்தில் இருந்தது. ஆனால் படத்தின் மையக்கதை என் எண்ணத்தை அடியோடு மாற்றிவிட்டது. இப்படத்தில் நடிப்பதற்காக நடிகை ஷகீலாவுடன் சில நாட்கள் பழக நேர்ந்ததும் இன்னும் தெளிவாகிவிட்டேன். இப்படத்தில் நீங்கள் கண்டிப்பாக ஒரிஜினல் ஷகீலாவைப் பார்க்கலாம்’ என்று தனது தாராள நடிப்புக்கு தானே உத்தரவாதம் தருகிறார் ஷகீலாவாக நடித்திருக்கும் ரிச்சா.

இப்படத்தில் ஷகீலாவை சீட்டிங் செய்த சில மலையாள தமிழ் நடிகர்களின் முகமூடிகளைக் கிழிக்கும் காட்சிகளும் இருப்பதாகவும் படம் ரிலீஸாகும் சமயத்தில் அது பரபரப்பாக பேசப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

படத்தின் துவக்கத்தில் ஒரிஜினல் ஷகீலாவும் சில நிமிடங்கள் தோன்றி, ‘செக்ஸ் படங்கள் பார்த்த பழக்கம், என் படங்கள் பார்த்ததோடு முடியட்டும். இனிமே நல்ல பிள்ளைகளா மாறி நாட்டுக்கு நல்லது செய்ற வழியைப் பாருங்க’ என்று அட்வைஸ் பண்ணுவது போல் கொஞ்சம் பேசுகிறாராம்.