வர வர சினிமா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களிலேயே ஒட்டுமொத்த மக்களின் கவனத்தை ஈர்த்துவிட வேண்டும் என்கிற துடிப்பு சினிமாக்காரர்களிடம் அதிகரித்துக்கொண்டு வருகிறது. நேற்று வெளியான விஷாலின் ‘அயோக்யா’ போஸ்டர் கிளப்பிய சர்ச்சையைத் தொடர்ந்து இன்று வெளியாகியுள்ள ‘ஷகீலா’ பட அம்மண போஸ்டரும் பெரும் அதிர்ச்சி கிளப்பியுள்ளது.

கடந்த ஆண்டு மூன்று மொழிகளில் துவங்கப்பட்ட படம் ‘ஷகீலா’. மலையாள செக்ஸ்பாம் நடிகை ஷகீலாவின் சொந்த வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாராகியிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. இதில் ஷகீலாவாக நடித்துள்ள நடிகை ரிச்சா தத்தா ஆடை எதுவுமின்றி வெறும் நகைகள் மட்டுமே அணிந்துள்ளார்.

மட்டுமின்றி போஸ்டரில் பல மொழிகளில் உள்ள கமெண்டுகளின் அர்த்தம் புரியாத நிலையில் தமிழில் இடம் பெற்றுள்ள ஒரே வாசகம் ...த்தா என்று இடம்பெற்றுள்ளது. தமிழ்த்திரைப்பட சங்கத்தில் இவற்றையெல்லாம் கண்காணிப்பதற்கென்று நியமிக்கப்பட்டுள்ள விளம்பர கிளியரன்ஸ் பார்ர்டிகள் இதையெல்லாம் கவனித்தார்களா? அல்லது கிடைக்கிற போண்டா வடைக்கு விலைபோய் விட்டுவிட்டார்களா என்பது அந்த ஷகீலாவுக்கே வெளிச்சம்.