Asianet News TamilAsianet News Tamil

சொகுசு கப்பலில் போதை பொருள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக ஷாருகான் மகன் ஆர்யன் கானிடம் விசாரணை!

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில், போதை பொருட்களுடன் நண்பர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக நடிகர் ஷாருகான் மகன் (Shah Rukh khan) ஆர்யன் கான் (Aryan Khan)  உள்பட 8 பேரிடம், போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Shah Rukh Khan son Aryan Khan is under investigation for being involved in a drug celebration on a luxury ship
Author
Chennai, First Published Oct 3, 2021, 12:05 PM IST

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில், போதை பொருட்களுடன் நண்பர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக நடிகர் ஷாருகான் மகன் ஆர்யன் கான் உள்பட 8 பேரிடம், போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: சமந்தா 200 கோடி ஜீவனாம்சமாக பெருகிறாரா? வெளியான உண்மை...

 

மும்பபையில் இருந்து கோவா செல்ல உள்ள கப்பலில் போதை பொருள் விருந்து பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், என்சிபி குழு, அதன் மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான போலீசார், நேற்று மும்பை கடற்கரையில் கப்பலில் நடந்த பார்ட்டி ஒன்றை சோதனை செய்தனர்.

Shah Rukh Khan son Aryan Khan is under investigation for being involved in a drug celebration on a luxury ship

இதுகுறித்து என்சிபி தெரிவித்துள்ள சமீபத்திய தகவலின்படி, பாலிவுட் நடிகர் ஷாருகானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஷாருக்கான் மற்றும் கௌரி கானின் மூத்த மகன் ஆர்யன் கான். இந்த தம்பதியினருக்கு சுஹானா கான் என்ற மகளும், அப்ராம் என்ற இளைய மகனும் உள்ளனர்.

மேலும் செய்திகள்: சமந்தா - நயசைத்தன்யா பிரிவு குறித்து... கனத்த இதயத்துடன் நாகர்ஜுனா வெளியிட்ட உருக்கமான தகவல்..!

 

Shah Rukh Khan son Aryan Khan is under investigation for being involved in a drug celebration on a luxury ship

இந்த விருந்தில் பார்ட்டியில் நேற்று நடைபெற்ற பொது சோதனையில் 3 பெண்கள் உள்பட மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கப்பலில் இதுபோன்று ஒரு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அதன் மண்டல இயக்குநர் சமீர் வான்கடே தலைமையிலான என்சிபி குழு, கோவா செல்லும் கப்பலில் நேற்று (சனிக்கிழமை) மாலை சோதனை நடத்திய பொது சில பயணிகளிடமிருந்து போதைப்பொருட்களை மீட்கப்பட்டதாகவும். குறிப்பாக தடை செய்யப்பட்ட போதை மருந்துகள் மீட்கப்பட்டதாக, அதிகாரி கூறியுள்ளனர். இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios