Sexy Durga can go to the Goa Film Festival - Court order action

கோவாவில் நடைபெற்று கொண்டிருக்கும் திரைப்பட விழாவில் ‘செக்ஸி துர்கா’ படத்தை திரையிட கேரள உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மலையாள இயக்குனர் சணல்குமார் சசிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘செக்ஸி துர்கா’.

இந்தப் படம் கோவாவில் நடைபெறும் ஐ.ஐ.எப்.இ. திரைப்பட விழாவில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது. இந்த செய்தி கடந்த சில நாள்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தியன் பனோராமாவால் இந்தப் படம் தேர்வு செய்யப்பட்டு, அந்தப் பட்டியல் செய்தி ஒளிபரப்பு துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், இறுதி செய்யப்பட்ட திரும்பி வந்த பட்டியலில் ‘செக்ஸி துர்கா’ மற்றும் மராத்திய படமான ‘நியூட்’ என இரண்டு படங்கள் நீக்கப்பட்டு விட்டன.

இதை எதிர்த்து கேரளா உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார் இயக்குனர் சணல்குமார் சசிதரன். அதனை விசாரித்த நீதிமன்றம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ‘செக்ஸி துர்கா’வை திரையிடுமாறு விழா குழுவுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.