சின்னத்திரையில் அறிமுகமான நடிகைகள் பலர், தன்னுடைய திறமையை வளர்த்து கொண்டு வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார்கள். அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற நடிகை லதா ராவ், நடு ரோட்டில் ஒரு பெண்ணிடம் அடி வாங்கி அழுத சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சின்னத்திரையை கலக்கும் காதல் தம்பதிகள் லதா ராவ் மற்றும் ராஜ்கமல். இவர்களுடைய காதல் எந்த அளவிற்கு என்பது இவர்கள் அணியும் ஒரே நிற ஆடையில் இருந்தே வெளிப்படும். எங்கு சென்றாலும் இவர்கள் ஒரே நிற ஆடைகளை தான் அணிவார்கள்.

லதா ராவ் வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்திருந்தாலும், இவருக்கு அறிமுகம் கொடுத்தது சின்னத்திரை தான். பல சீரியல்களில் பெரிய கண்களை வைத்து உருட்டி உருட்டி மிரட்டும் வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். 

அப்படி சில வருடங்களுக்கு முன் இவர் நடிப்பில் ஒளிபரப்பாகி வந்த சீரியலில் இவர் வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். நாயகியை பாடாய் படுத்தும் கதாப்பாத்திரம் அது. 

ஒருநாள் லதா ராவ் வெளியில் சென்ற போது... இவரை ஒரு பெண் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இனி நாயகியை நீ டார்ச்சர் பண்ண கூடாது எனவும் எச்சரித்தாராம். இதனால் ஒரு நிமிடம் என்ன செய்வதென்றே தெரியாமல் கண் கலங்கி அந்த இடத்தில் அழுதவாறு நின்றாராம் லதா ராவ். இந்த தகவலை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் லதா.