பல இளைஞர்கள் மனதை கவர்ந்த சின்னத்திரை சீரியல்களில் ஒன்று கல்யாணம் முதல் காதல்வரை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த சீரியலில் நாயகியாக முன்பு செய்தி வாசிப்பாளர் சாத்தியப்பிரியா நடித்தார். இவருக்காகவே இதை பலர் பார்த்தனர். 

ஆனால் அவர் தற்போது தனது காதலனை திருமணம் செய்து கொள்ளப்போவதால் இந்த சீரியலை விட்டு விலகியதையடுத்து ப்ரியா கதாபாத்திரத்தில் நடிக சயித்ரா என்பவர் மாற்றப்பட்டுள்ளார்.

இவர் இதே சீரியலின் கன்னட பதிப்பான அவனு மாத்தே ஷர்வானியில் நடித்து வந்தாவர் என்பது குறிப்பிடதக்கது. 

பெங்களூரில் பிறந்து வளர்ந்து வந்த இவரின் முதல் தமிழ் சீரியல் இது தான். மிகவும் மெச்சூரிட்டியான பெண்ணாக தெரியும் இவருக்கு 21 ஆகிறதாம் . இவர் பிசிஏ படித்து வருகிறாராம்.

தீவிர சூர்யா ரசிகையான இவருக்கு சூர்யாவுடன் நடிக்க விருப்பமாம். விரைவில் இவரை கதாநாயகியாக தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.