பிரபல சீரியல் நடிகையை காணவில்லை என அவருடைய பெற்றோர் எஸ்.ஆர்.நகர் காவல் நிலையத்தில், பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளனர்.

தெலுங்கு சீரியல்களில் நடித்து வரும் நடிகை லலிதா, ஆந்திர பிரதேசத்தை மாநிலம் தர்மவரத்தை சேர்த்தவர். இவர் தொடர்ந்து இரண்டு மூன்று சீரியல்களில் நடித்து வருவதால், ஹைதராபாத்தில் உள்ள  ஹாஸ்டலில் தங்கி நடித்து வந்தார்.

இவரை போனில் தொடர்பு கொள்ள இவருடைய பெற்றோர் ஒரு வாரமாக முயற்சி செய்தும், இவருடைய செல் போன் ஸ்விட் ஆப் செய்யப்பட்டிருந்தால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதை தொடர்ந்து, இவர் தங்கி இருந்த ஹாஸ்டலில் தேடிய போது இரண்டு மாதங்களுக்கு முன்பே ஹாஸ்டலில் இருந்து அவர் வெளியேறிவிட்டதாக ஹாஸ்டல் உரிமையாளர் தெரிவித்தார். 

இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை லலிதாவின் பெற்றோர் இது குறித்து எஸ்.ஆர்.நகர் காவல் நிலையத்தில் தன்னுடைய மகளை ஒரு வாரமாக காணவில்லை என புகார் கொடுத்தனர். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் காணாமல் போன நடிகை லலிதாவை தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் தெலுங்கு சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.