seriyal actress aliya manasa arrested in japan police

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் மிகவும் பிரபலமானது 'ராஜா ராணி'. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதில் செம்பா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஆலியா மானசாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

சீரியல் மட்டும் இன்றி, டான்ஸ், டப்மேட்ச் என வலைதளத்தை கலக்கி வருகிறார். இந்நிலையில் இவர் வெளியிட்ட ஒரு தகவல் அனைத்து ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் 

இவருடைய தோழியை சந்திக்க ஜப்பான் சென்றிருந்தார். அப்போது தன்னுடைய தோழியுடன் மிதிவண்டியில் டபுள்ஸ் சென்றுள்ளார்.

திடீர் என ஜப்பான் போலீஸ் இவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். காரணம், அங்கு டபுள்ஸ் செல்வது தவறாம்... பின் இருவரும் போலீசாரிடம் மன்னிப்பு கேட்டு அவர்களிடம் இருந்து தப்பி வந்ததாக சமீபத்தில் கொடுத்துள்ள ஒரு பேட்டியில் ஆலியா கூறியுள்ளார்.