தளபதியின் 'மாஸ்டர்' படத்திற்கு புதுசு புதுசா பிரச்சனைகள் வந்து கொண்டிருப்பது, படக்குழுவினரை மட்டும் இன்றி, விஜய் ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஏற்கனவே 'பிகில்' பட தயாரிப்பாளர், அர்ச்சனா கல்பாத்தியின் ஏஜிஎஸ் சினிமாஸுக்கு சொந்தமான 20 வது க்கும் மேற்பட்ட இடங்களில் சமீபத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்ட நிலையில், தற்போது 'மாஸ்டர்' பட இணை தயாரிப்பளார் வீட்டில் ஐடி அதிகாரிகள் ரெய்டு மேற்கொண்டுள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில்... மாஸ்டர் படவிநியோகம் 220 கோடிக்கு நடந்ததாகவும், அதில் லலித்குமாருக்கு மட்டும் 50 கோடி சென்றதாக தகவல் வெளியானதையடுத்து, நேற்று மாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள்,  வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள்.  

மார்ச் 15ஆம் தேதி, மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளீட்டு விழா நடைபெற உள்ள நிலையில், இந்த ஐ.டி ரெய்டு நடைபெறுவது, விஜய்க்கு மேலும் சிக்கலை உருவாக்கியுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.